கரகாட்டம், கதகளிக்கு நீதிமன்றம் நிபந்தனை!

Report Print Ajith Ajith in இந்தியா
கரகாட்டம், கதகளிக்கு நீதிமன்றம் நிபந்தனை!
80Shares

தமிழகத்தில் கோயில் விழாக்களில் நடத்தப்படும் கரகாட்டம் மற்றும் கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி ஆகியவற்றில் ஆபாச நடனம், பாடல், வசனம் இருக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி ஒரு அங்கமாக மாறிவிட்டது.

இதில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச நடன அசைவுகள் இடம்பெறுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டமையை அடுத்து ஆடல், பாடலுக்கு பொலிஸார் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இதனையடுத்து விழாக்குழுவினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெறுகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பழமையான கலையான கரகாட்டம், கேரளத்தின் பாரம்பரிய நடனமான கதகளிக்கும், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments