பொலிஸ் அதிகாரி தற்கொலை விவகாரம்: கர்நாடக அமைச்சர் ஜார்ஜ் ராஜினாமா

Report Print Arbin Arbin in இந்தியா
பொலிஸ் அதிகாரி தற்கொலை விவகாரம்: கர்நாடக அமைச்சர் ஜார்ஜ் ராஜினாமா
116Shares

கர்நாடக காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அமைச்சர் ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி (51). இவர் கடந்த 7-ம் திகதி, தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துக்கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது பணியில் அமைச்சர் ஜார்ஜ் அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

தன் மீது ஊழல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் செய்ததாக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தப் போவதாக அமைச்சர் ஜார்ஜ் மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் மிரட்டியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்த, முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் சி.பி.ஐ. விசாரணை கோரி போராட்டம் நடத்தின. மேலும் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுடபடப்போவதாக அறிவித்திருந்தன.

இதனிடையே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பொலிஸ் அதிகாரி கணபதியின் மகன் கர்நாடக நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து அமைச்சர் ஜார்ஜ் மற்றும் 2 பொலிஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அமைச்சர் ஜார்ஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜார்ஜ் உள்துறை அமைச்சராக இருந்தபோது பொலிஸ் தூறை அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments