டெல்லி முதலமைச்சர் பொற்கோயிலில் பாத்திரம் துலக்கியது ஏன்?

Report Print Arbin Arbin in இந்தியா
டெல்லி முதலமைச்சர் பொற்கோயிலில் பாத்திரம் துலக்கியது ஏன்?
124Shares

ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை விளக்க அறிக்கையால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பொற்கோயிலில் பாத்திரம் துலக்கி பிராயசித்தம் தேடிக்கொண்டார்.

அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சி அதிக கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆம் ஆத்மி இளைஞர் பிரிவு கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தில் பொற்கோயில் சித்தரிக்கப்பட்டு அதன் அருகே துடைப்பம் (கட்சியின் சின்னம்) இருப்பதாக வடிவமைக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியது.

மேலும் பஞ்சாப்பை சேர்ந்த ஆம் ஆத்மி தலைவர் ஒருவர், ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சீக்கியர்களின் புனித நூலுடன் ஒப்பிட்டார். இதுவும் சீக்கியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சீக்கியர்களின் கோபம் தேர்தலில் வெளிப்படலாம் என்ற அச்சம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் அமர்தசரஸ் பொற்கோயிலுக்கு வந்து, சமையலறையில் பாத்திரங்களைக் கழுவி பிராயசித்தம் தேடிக்கொண்டார்.

இதற்காக, ஞாயிற்றுக் கிழமை இரவே அமர்தசரஸ் வந்துவிட்ட கெஜ்ரிவால், இன்று காலை பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டதுடன், சமுதாய சமையல் கூடத்துக்குள் சென்று, அங்கிருந்த பாத்திரங்களை கழுவினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் சமையலறையில் இருந்தார் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments