வெளிவருகிறது திமுக- காங். கூட்டணிக்கு வேட்டு வைக்கும் ஆ.ராஜாவின் புத்தகம்?

Report Print Arbin Arbin in இந்தியா
வெளிவருகிறது திமுக- காங். கூட்டணிக்கு வேட்டு வைக்கும் ஆ.ராஜாவின் புத்தகம்?
118Shares

அலைக்கற்றை ஊழல் தொடர்பான உணமைகளை வெளிப்படுத்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவின் புத்தகம் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைக்கும் என கூறப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராஜாவின் "IN MY DEFENCE" புத்தகம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. திமுக தலைமையின் எதிர்ப்பை மீறி இந்த புத்தகத்தை வெளியிட ஆ.ராஜா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா கைது செய்யப்பட்டு 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. அதே கால கட்டத்தில் தம்முடைய "IN MY DEFENCE" புத்தகத்தை வெளியிட ஆ.ராஜா முடிவு செய்துள்ளாராம்.

இது தொடர்பாக அண்மையில் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரிடம் ராஜா விவாதித்திருக்கிறார். இருந்தபோதும் இப்புத்தக்கத்தால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கருணாநிதி உள்ளிட்டோர் ராஜா புத்தகம் வெளியாவதை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆ.ராஜாவின் இப்புத்தகத்தில், அவரது பதவிக்காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு எப்படி ஏகபோகமான ஒரு சில நிறுவனங்களிடம் இருந்தது; இதை தகர்க்க எடுத்த நடவடிக்கைகள்; உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஆ.ராஜாவின் புத்தகம் இருப்பதாக கூறப்படுகிறது.

1992ல், பெரம்பலுாரில், தனது அலுவலகத்தில் முதல் லேண்ட் - லைன் தொலைபேசி இணைப்பு பெற்றதில் இருந்து, இன்றைக்கு தொலைத் தொடர்புத் துறையில் ஆதிக்கம் செலுத்தும், தனியார் மொபைல் போன் நிறுவனங்களின் கூட்டணி வரைக்கும் இந்த நுால் அலசி ஆராயும் என முன்னர் ஒரு முறை ஆ.ராஜா குறிப்பிட்டிருந்தார்.

தனது பதவிக் காலத்தில், இந்த ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, தாம் எடுத்த கடும் நடவடிக்கைகளும், இதில் நிச்சயம் இடம் பிடிக்கும் எனவும்,

நீதிமன்ற விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் கவனிக்கத் தவறிய விஷயங்கள், நீதிபதிகளின் பங்களிப்பின் முக்கியத்துவம் என இந்த வழக்கு தொடர்பாக சட்டரீதியான அனைத்து அம்சங்களும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே புத்தகம் எழுதுவதாக அவர் கூறியிருந்தார்.

ஆ. ராஜாவின் புத்தகம் வெளியானால் அரசியல் அரங்கத்தில் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments