ஆணவக் கொலை செய்யப்பட்டார் சுவாதி?

Report Print Fathima Fathima in இந்தியா
ஆணவக் கொலை செய்யப்பட்டார் சுவாதி?
1629Shares

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் 24ம் திகதி சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ராம்குமார் என்பவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், தினமும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சுவாதி முஸ்லிம் மதத்துக்கு மாற இருந்ததாகவும், நோன்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே சுவாதியை ஆணவக் கொலை செய்திருக்கலாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சுவாதி கொலை செய்யப்பட்டதற்கு ஒருதலைக் காதல் காரணம் அல்ல, மதம் விட்டு மதம் மாறி காதலித்ததே காரணம், ராம்குமார் சுவாதியை காதலித்ததாக எந்தவொரு தகவலும் இல்லை.

இந்த கொலையில் உள்ள உண்மைகளை பொலிசார் மூடி மறைக்கின்றனர், எனவே சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments