ஜாமீன் கேட்டு தவிக்கும் ஆடி கார் ஐஸ்வர்யா

Report Print Deepthi Deepthi in இந்தியா
ஜாமீன் கேட்டு தவிக்கும் ஆடி கார் ஐஸ்வர்யா
741Shares

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த ஆடி கார் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையை முனுசாமி என்ற முதியவர் கடந்த 2 ஆம் திகதி அதிகாலையில் கடந்து செல்ல முயற்சித்தபோது, வேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியதில், முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து கிண்டி போக்குவரத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து, காரை குடிபோதையில் வேகமாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக சேத்துப்பட்டையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா வில்டன் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இதன்படி, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு ஐஸ்வர்யா வில்டன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு 6-ம் திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரர் குடிபோதையில் இருந்தாரா? என்பதை உறுதி செய்யும் விதமாக அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த ஆய்வு அறிக்கை இன்னும் வரவில்லை. எனவே, மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கவேண்டும்’ என்றார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை 13–ந் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 14-ம் திகதி மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments