கொடுமையின் உச்சம்: இப்படியும் ஆண்களா?

Report Print Deepthi Deepthi in இந்தியா
2635Shares

ஹரியான மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்,மீண்டும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ரோடெக் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் அங்கிருந்த கல்லூரி ஒன்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அடையாளம் தெரியாத ஐந்து நபர்களால் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது, இக்குற்றத்திற்காக பணம் தருகிறோம் என அப்பெண்ணின் குடும்பத்தினரை, இவர்கள் மிரட்டியுள்ளனர், ஆனால் அதற்கு இக்குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை.

இதுதொடர்பான வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது, இந்நிலையில் தனது மகளின் படிப்பை கருதி அப்பெண்ணின் தாயார், பிவானி நகரத்தை விட்டு ,ரொடெக் நகரத்தில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோடெக் நகரில் வைத்து மீண்டும் அப்பெண்ணை, இவர்கள் பாலியல் பலாத்கரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இது குறித்து ரோடெக் பொலிசார் கூறியதாவது, இச்சம்பவம் குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.இதை பற்றிய தகவல்கள் அனைத்தும் பிவானி பொலிசாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சிகிச்சைக்காக அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments