48 மணி நேரத்தில் விஜயகாந்தை திமுகவில் சேர்ப்போம்: பார்த்திபன் பரபரப்பு பேச்சு

Report Print Deepthi Deepthi in இந்தியா
48 மணி நேரத்தில் விஜயகாந்தை திமுகவில் சேர்ப்போம்: பார்த்திபன் பரபரப்பு பேச்சு
400Shares

சேலத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் தே.மு.தி.க.வினர் 25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.

25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்து கொண்டதற்கான உறுப்பினர் படிவங்களை மு.க.ஸ்டாலினிடம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் வழங்கினார்கள்.

இதில் பேசிய பார்த்திபன், நாங்கள் தேமுகதிவை உடைக்க சதி செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது, நாங்கள் நினைத்தால் 48 மணி நேரத்தில் விஜயகாந்தை தி.மு.க.வில் சேர்ப்போம் என்று கூறியுள்ளார்.

விழாவில் வி.சி.சந்திரகுமார், ‘தமிழகம் முழுவதும் மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த 25 ஆயிரம் பேர் இன்றைய தினம் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். தே.மு. தி.க.வில் உள்ளவர்களை தி.மு.க.விற்கு அழைப்பது எனது உரிமை’ என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments