அலுவலகத்துக்கு மது அருந்தி வந்த காவலர்: சிறை வைத்த உயர் அதிகாரி

Report Print Deepthi Deepthi in இந்தியா
அலுவலகத்துக்கு மது அருந்தி வந்த காவலர்: சிறை வைத்த உயர் அதிகாரி
257Shares

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுஅருந்தி வந்ததால் கஜேந்திரன் என்பவரை மூன்றுநாட்கள் உயர் அதிகாரி சிறைவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மாவட்டத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் என்பவர் அம்மாவட்டத்தில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்க, டந்த சில தினங்களுக்கு முன் அலுவலகத்துக்கு மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உயர் அதிகாரி சுப்பிரமணி அவரை கடந்த 15 ம் திகதி அலுவலகத்தின் உள்ளே வைத்து சிறை வைத்துள்ளார்.

கஜேந்திரன் தொடர்ந்து அலுவலகத்திலிருந்து கூக்குரலிட்டதால் அருகில் உள்ள பொதுமக்கள் பொலிசாரிடம் தகவல் தெரிவித்தனர்

தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து கஜேந்திரனை மீட்டு விசாராணை நடத்திவருகின்றனர்.

மேலும் கடந்த முன்று நாட்கள் கஜேந்திரன் உணவின்றி இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments