இனிமேல் சட்டமன்றத்தில் பேசாமல் வெளிநடப்பு செய்ய மாட்டோம்: ஸ்டாலின் உறுதி

Report Print Basu in இந்தியா
இனிமேல் சட்டமன்றத்தில் பேசாமல் வெளிநடப்பு செய்ய மாட்டோம்: ஸ்டாலின் உறுதி
81Shares

கடந்த முறையை விட பலமான எதிர்க்கட்சியாக திமுக சட்டப்பேரவையில் உருவெடுத்துள்ள நிலையில், இனிமேல் என்ன நடந்தாலும் எந்தப்பிரச்சனையானாலும் சட்டமன்றத்தில் பேசாமால் வெளியே வரமாட்டோம் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சந்திரகுமார் தலைமையிலான மக்கள் தேமுதிக கட்சியை, திமுகவுடன் இணைக்கும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இதன் போது மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் தே.மு.தி.க.வினர் 25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதனையொட்டி, சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் வகையில், 500 கடைகளை முதல்கட்டமாக மூடியதாக சொல்லும் அதிமுக அரசு, கோவில்கள், மருத்துவமனைகள்,போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடிய மதுக்கடைகளை இன்னும் மூடவில்லை.

திராவிட இயக்கங்களின் அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனார்கள். திராவிட இயக்கங்களின் சேவை இன்றைக்கு மக்களுக்குத் தேவை.

நூற்றாண்டு கொண்ட திராவிட இயக்கம் மேலும் பல நூற்றாண்டு இருந்தாக வேண்டும். மேலும் திமுகவைத் தொடங்கிய அண்ணா விட்டுச் சென்ற பணிகளை கருணாநிதி நிறைவேற்றி வருகிறார்.

கடந்த முறையை விட பலமான எதிர்க்கட்சியாக திமுக சட்டப்பேரவையில் உருவெடுத்துள்ள நிலையில், இனிமேல் எதுவாக இருந்தாலும் பிரச்னையைப் பற்றி பேசாமல் வெளிநடப்பு செய்ய மாட்டோம்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதங்களாகி விட்டது. ஏதாவது புதிய தொழிற்சாலை தொடங்கியிருக்கிறார்களா அல்லது புதிய தொழிற்சாலை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தமாவது போடப்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments