சென்னை ஐ.ஐ.டி.வளாகத்தில் மருத்துவ ஆராய்ச்சி மாணவி உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை

Report Print Arbin Arbin in இந்தியா
சென்னை ஐ.ஐ.டி.வளாகத்தில் மருத்துவ ஆராய்ச்சி மாணவி உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை
209Shares

சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதி அறையில் மருத்துவ ஆராய்ச்சி மாணவி மற்றும் பேராசிரியரின் மனைவி ஆகியோர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டியில் அமைந்துள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் மருத்துவ ஆராய்ச்சி மாணவி மகேஷ்வரி என்பவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம் ஐ.ஐ.டி, வளாக குடியிருப்பில் வசித்துவரும் பேராசிரியர் கணேசன் என்பவரது மனைவி விஜயலட்சுமியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஐ.ஐ.டி. வளாக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் பொலிசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஐ.ஐ.டி நிர்வாகம் விசாரணை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளது. அதில், மருத்துவ மாணவி மகேஷ்வரி உயிரிழப்பு சம்பவம் குறித்து பொலிசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஐ,டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் ஐ.ஐ.டி வளாகத்தில் ரோகித் வெமுலா என்ற மாணவல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments