நடுரோட்டில் குடும்பத்தினரை அடித்த பொலிஸ் அதிகாரிகள்! நடந்தது என்ன? ராஜா விளக்கம்

Report Print Fathima Fathima in இந்தியா
1708Shares

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொக்கவாடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (40) என்பவரையும், அவரது மனைவி உஷா, மகன் சூர்யா 3 பேரும் செங்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ராஜாவிற்கும், உஷாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த செங்கம் பொலிஸ்காரர் நம்மாழ்வார் தகராறு குறித்து ராஜாவிடம் கேட்டுள்ளார்.

இதற்கு ராஜா இது எங்கள் குடும்ப தகராறு நீங்கள் தலையிட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த நம்மாழ்வார் தான் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு தெரிவித்தார். உடனே சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், மற்றொரு பொலிஸ்கார் அதிகாரி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்நிலையில் 3 பொலிஸ்காரர்களும் இணைந்து பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதனை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

தற்போது திருவண்னாமலை அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று எதிரொலித்தது.

வக்கீல்கள் பலர் கேள்வி எழுப்பிய நிலையில் பதில் அளித்த நீதிபதி பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம் எனவும் தாக்கல் செய்யப்படும் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ராஜா கூறியதாவது, பொலிசார் எங்களை நடுரோட்டில் வைத்து அடித்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று அடித்தனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் தான் எங்களை விசாரித்து அனுப்பி வைத்தார்.

அடித்த வழிதாங்க முடியாமல் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றோம், அப்போது அங்கு வந்த பொலிசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கூடாது, தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டுமெனக் கூறி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையறிந்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பொலிசார் மறுபடியும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை மற்றும் சாலை மறியல் காரணமாக 3 பொலிஸ்காரர்களையும் வேலூர் ஆயுதப் படைக்கு மாற்றியுள்ளனர். இருந்தாலும் பணியிடை நீக்கம் செய்யாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, எங்களை தாக்கிய 3 பொலிஸ்காரர்கள் மீதும் வழக்குத் தொடர சென்னை சேர்ந்த வழக்கறிஞர் நடராஜனை அணுகியுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments