எனது மகளை ஏன் கொன்றாய்? கண்ணீர் விட்டு கதறிய சுவாதியின் தந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா
எனது மகளை ஏன் கொன்றாய்? கண்ணீர் விட்டு கதறிய சுவாதியின் தந்தை
1223Shares

புழல் சிறையில் ராம்குமாரை சரியாக அடையாளம் காட்டிய சுவாதியின் தந்தை, ராம்குமாரை பார்த்து கதறி அழுதுள்ளார்.

புழல் சிறையில் ராம்குமாரை போலவே முகத்தோற்றம் கொண்ட 35 பேரில் இருந்து 10 பேரை நீதிபதி சங்கர் தேர்வு செய்து அடையாள அணிவகுப்பில் பங்கேற்க வைத்தார்.

ராம்குமாரின் கழுத்தில் பிளேடால் வெட்டப்பட்டு, தையல் போட்ட அடையாளம் இருப்பது அனைவருக்குமே தெரியுமென்பதால், அடையாள அணிவகுப்பில் பங்கேற்ற அனைவரின் கழுத்திலும் பிளாஸ்திரி போடப்பட்டு ஒரே மாதிரியாக காட்சியளிக்குமாறு செய்யப்பட்டது

ராம்குமாரை அடையாளம் காட்ட மொத்தம் 3 முறை அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டது. முதல் ரவுண்டில் சுவாதியின் தந்தை, ராம்குமாரை சரியாக அடையாளம் காட்ட முடியாமல் குழம்பியதாக கூறப்படுகிறது.

எனினும் மிகுந்த யோசனைக்குப்பின் இவர்தான் என்று அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. இரண்டாவது ரவுண்டில் அனைவருமே சிவப்பு சட்டை அணிந்திருந்தனர். இந்த ரவுண்டிலும் சுவாதியின் தந்தையும், சிவகுமாரும் ராம்குமாரை எளிதாக அடையாளம் காட்டியுள்ளனர்.

முதல் இரு ரவுண்டுகளிலும் ராம்குமாரை அடையாளம் காட்டினாலும் ராம்குமாரிடம் சுவாதியின் தந்தை எதையும் பேசவில்லை. ஆனால் மூன்றாவது ரவுண்டில் ராம்குமாரை பார்த்ததும் சுவாதியின் தந்தையால் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

உணர்ச்சி வசப்பட்டவராய், '' என் மகளை ஏன் கொலை செய்தாய்' என திரும்ப திரும்பக் கேட்டு கதறியுள்ளார். “உன்னால்தானே எனது மகள் கொல்லப்பட்டாள் இப்போது நானும் உன்னால்தான் சிறைக்குள்ளேயே வந்துள்ளேன் ''எனக் கூறி கண்ணீர் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments