சுவாதி கொலை வழக்கு: சிறையில் நாளை மறுநாள் அடையாள அணிவகுப்பு

Report Print Arbin Arbin in இந்தியா
சுவாதி கொலை வழக்கு: சிறையில் நாளை மறுநாள் அடையாள அணிவகுப்பு
716Shares

சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், கொலையாளியை உறுதி செய்ய வரும் திங்கள்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்த பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

சுவாதி கொலை வழக்கில், கடந்த 1ம் திகதி ராம்குமார் கைது செய்யப்பட்டார். கழுத்தை பிளேடால் வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில், நெல்லை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் ராம்குமாருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை அங்கு சந்தித்த அவர் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமார் மிகவும் விரக்தியில் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ராம்குமாரை திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

அடையாள அணிவகுப்புக்குப் பிறகு ராம்குமாரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது கொலை வழக்கில் மேலும் ஆதாரங்களை திருட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

ராம்குமார்தான் கொன்றாரா அல்லது வேறு யாரும் கொலையில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகங்கள் சமீபகாலமாக காட்டு தீ போல பரவி வரும் நிலையில், அடையாள அணி வகுப்பில் நேரில் பார்த்த சாட்சியங்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமாறுக்கு ஜாமீன் கேட்டு மனு செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments