தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய பெண்ணிடம் ரூ.30 லட்சம் பணத்தை சுருட்டிய பலே ஆசாமி

Report Print Arbin Arbin in இந்தியா
தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய பெண்ணிடம் ரூ.30 லட்சம் பணத்தை சுருட்டிய பலே ஆசாமி
816Shares

குஜராத் மாநிலத்தில் தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவான நபர் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நவரங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி (42). ஆசிரியையான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணம் கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் இவருக்கும் சுரேந்தர் நகரைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்திய ஆஷிஷ், 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், தனது கையெழுத்து போன்று போலி கையெழுத்துகள் போட்டு வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடிவிட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆர்த்தி.

கடந்த ஏப்ரல் மாதம் பிள்ளைகளின் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றபோதுதான் இந்த மோசடி குறித்து அவருக்கு தெரியவந்துள்ளது.

அவரது இரண்டு வங்கி கணக்குகளில் வெறும் 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்த்தி, உடனே ஸ்டேட்மென்ட் எடுத்து பார்த்தார்.

அப்போது, இரண்டு வங்கிகளிலும் தலா ஒரு லட்சம் எடுத்திருந்தது தெரியவந்தது. பின்னர் வங்கிக்கு சென்று கணக்கை சரிபார்த்தபோது 8 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் கிரெடிட் கார்டு மூலம் 8 லட்சம் எடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆஷிஷிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்ட அவர் விரைவில் திருப்பி தருவதாக கூறியிருக்கிறார்.

ஆனால், அதன்பின்னர் அவரிடம் பேசுவதையே தவிர்த்துள்ளார். இதுதவிர தொழில் தொடங்குவதற்காக ஆஷிஷ்க்கு 13 லட்சம் ரூபாய் கடனும் கொடுத்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து தன்னை ஏமாற்றி பணம் மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்த்தி புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments