இரு சக்கர பயனர்கள் தலைக்கவசங்கள் அணிவது இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில்.
இன்று கொல்கத்தா பொலிசார், தலைக்கவசம் இல்லயெனில் எரிபொருள் கிடையாது என்ற புதிய விதியை அமல்படுதியுள்ளனர்.
மேலும், தலைக்கவசம் உள்ளவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
"பாதுகாப்பான பயணம் வாழ்க்கை பாதுகாப்பு" என்ற சாலை பாதுகாப்பு திட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது, பேசிய அவர், சாலை பாதுகாப்பு குறித்தும், அதிகரித்து வரும் விபத்துகள் குறித்தும் தான் வருந்துவதாக தெரிவித்தார்.
மேலும், சாலை விபத்தை தடுக்க கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதைதொடர்ந்தே, கொல்கத்தா பொலிசார் இப்புதிய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.