தென்னாப்பிக்காவில் மகாத்மா காந்தி விடுதலை உணர்வுக்கு வித்திட்ட ரயில் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி பீட்டர் மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
கடந்த 1893ம் ஆண்டு தென்னாப்ரிக்காவின் பிரிட்டோரியாவில் நிற வெறி காரணமாக மகாத்மா காந்தி ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டார்.
இதுதான், ஆங்கிலேயர்களின் நிறவெறிக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் காந்தியை போராட தூண்டியது.
இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் காந்தி பயணித்த அதே ரயில் பாதையில், தென்னாப்ரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார்.
அவருடன் அதிபர் உள்ளிட்டோரும் சென்றனர். முன்னதாக ஜோஹன்னஸ்பர்கில் மோடி இந்தியா வம்சாவளியினரை சந்தித்தார்.
பின்னர் பேசிய மோடி தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்கு இந்தியாவில் இருந்து சென்றவர்கள் பாடுப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
தற்போது தென்னாப்பிக்கா பெற்றுள்ள பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வம்சாவளியினரின் பங்களிப்பு பெரிது என மோடி பாராட்டினார்.
தமது உரையில் அன்னல் காந்தி அடிகளை மகாத்மாவாக மாற்றியது தென்னாப்பிக்காதான் என புகழாரம் சூட்டியுள்ளார்.
In the footsteps of the Mahatma. PM @narendramodi relives the train journey to Pietermaritzburg. pic.twitter.com/1fXgOGUfXd
— Vikas Swarup (@MEAIndia) July 9, 2016