சுவாதியை ராம்குமார் கொன்றதாக பொலிசார் கைது செய்தவுடன் அவரது பேஸ்புக் நண்பர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது.
கடந்த யூலை 4ம் திகதி அன்று ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் 379 நண்பர்கள் இருந்தனர்.‘
யூலை 9ம் திகதி அந்த எண்ணிக்கை 292ஆக குறைந்துள்ளது. நமக்கு எதற்கு வம்பு என்று அவரது பேஸ்புக் நண்பர்கள் தொடர்பிலிருந்து விலகி வருகிறார்கள். கொலை நடந்தவுடன் பொலிசார், சுவாதியின் பேஸ்புக், செல்போன் நம்பரின் டூப்ளிகேட் சிம் ஆகியவற்றை கொண்டு குற்றவாளியை தேடினர்.
இதன்பிறகு சுவாதியின் பேஸ்புக் முடக்கப்பட்டு அதில் உள்ள விவரங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. டூப்ளிகேட் சிம் மூலம் சுவாதியுடன் பேசியவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் உதவியுடன் அவரது இன்கம்மிங், அவுட்கோயிங் கால்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணை தகவல்கள் தனிப்படை பொலிஸ் உயரதிகாரிகளைத் தவிர வேறுயாருக்கும் தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.