எத்தனை உசுரு போனாலும் ஜெயலலிதா முக்கியமாக நினைப்பது மதுக்கடையை: பெண்கள் ஆவேசம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
எத்தனை உசுரு போனாலும் ஜெயலலிதா முக்கியமாக நினைப்பது மதுக்கடையை: பெண்கள் ஆவேசம்
195Shares

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் தரதரவென்று இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

பொலிசார் இழுத்துச் செல்லும்போது, இழுத்து மூடு... இழுத்து மூடு... டாஸ்மாக் கடையை இழுத்து மூடு... இழுத்து மூடு... வெல்லட்டும்... வெல்லட்டும்... டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்... என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு பெண் மயக்கமடைந்தார்.

அப்போது பெண்கள்பொலிசாரிடம் கடும் வாக்குவாதத்தல் ஈடுபட்டனர். நேற்று நாங்கள் அமைதியாக போராட்டடம் நடத்தினோம்.

ஏதாவது பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தோமா. எங்களால் எந்த இடையூறாவது இருந்ததா. பிறகு ஏன் எங்களை கைது செய்கிறீர்கள்.

எங்களை கைது செய்து சாகடிக்காதீர்கள். டாஸ்மாக் கடையை திறந்து எங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். இந்த மதுக்கடையை மூடாமல் இருப்பதற்கு காரணம் காவல்துறைதான்.

எத்தனை உசுரு போனாலும்கூட இந்த தமிழக முதலமைச்சருக்கு மதுக்கடை வருமானம் ஒன்றுதான் வேணுமுன்னு நினைக்கிறாங்க. மதுக்கடை வேண்டாம் என்று கருதும் பொதுநல அமைப்புகள் எங்களுடன் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறினர்.

கடந்த 5–ந் திகதி பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள வழிப்பறி கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியை நந்தினி உயிரிழந்தார்.

அப்போது சாலையோரம் படுத்திருந்த சேகர் என்ற முதியவரும் வாகனம் மோதி உயிரிழந்தார். கொள்ளையன் குடிபோதையில் இருந்ததால் மது தான் பிரச்சினைக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கொதித்து எழுந்தனர்.

அந்த பகுதியில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையை அகற்றவேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அக்கடை மீது கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மதுவுக்கு எதிரான அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments