ராம்குமாருக்கு ஜாமீன் கேட்கப்போவதில்லை: வழக்கறிஞர் ராம்ராஜ்

Report Print Deepthi Deepthi in இந்தியா
702Shares

சுவாதி கொலை வழக்கு தொடர் பாக கைதாகி, சிறையில் அடைக் கப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஜாமீன் கேட்கப் போவதில்லை என்று வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் கூறியதாவது, ராம்குமார் மட்டுமின்றி, அவரின் குடும்பத்தினரும் காவல்துறையால் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருமே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ராம்குமாருக்கு அவரது சொந்த ஊர் மக்கள் இன்னும் ஆதரவாக உள்ளனர். அதேசமயம், ஒரு பெண்ணின் கொலையை இந்த கிராம மக்களோ, இச்சமூகமோ ஏற்றுக்கொள்ளாது.

இந்த வழக்கில் ராம்குமாருக்கு உடனடியாக ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் யப்போவதில்லை. அதேநேரத்தில் ராம்குமாருக்கு மனரீதியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

இந்த வழக்கில் உண்மை வெளியே வரவேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். இன் னும் ஓரிரு நாளில் சிறையில் மீண்டும் ராம்குமாரை சந்தித்து பேச உள்ளேன். அவரிடம் தனியாக அரை மணி நேரம் பேசினால் பல உண்மைகள் தெரியவரும்.

சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments