இங்கிலாந்து எனக்கு தாய்வீடு, நான் நன்றாக இருக்கிறேன்: விஜய் மல்லையா

Report Print Deepthi Deepthi in இந்தியா
இங்கிலாந்து எனக்கு தாய்வீடு, நான் நன்றாக இருக்கிறேன்: விஜய் மல்லையா
617Shares

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,600 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக மும்பை நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், இங்கிலாந்தில் நேற்று நடந்த பார்முலா ஒன் கார் பந்தயம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், போர்ஸ் இந்தியா அணி உரிமையாளர் என்ற முறையில் மல்லையா பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது, நான் பந்தயத்தை விரும்புபவன், கார் பைத்தியம், இதனால்தான் இக்குழுவை வாங்கினேன். மொனாகோவிலும், பாகுவிலும் நடந்த போட்டியில் எனது குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இருந்தாலும், அதை நேரில் காணும் வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். வாழ்க்கை அதன் போக்கில் செல்ல வேண்டும்.

முன்பை விட மிக நன்றாகவே இருக்கிறேன். இந்திய அரசு எனது பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து விட்டது. அதற்காக இந்த உலகமே முடிந்து போனதாக அரத்தமில்லை.

இங்கிலாந்தும் எனக்கு தாய்வீடு போன்றதுதான். 1992ம் ஆண்டு முதல் இங்கு தங்கியிருக்கிறேன். இங்கு நான் மிகவும் பிரபலம். ஏதோ வேற்று உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு எதுவும் எனக்கு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments