ராசியில்லையே.... தேமுதிக தலைமை அலுவலகத்தை இடம் மாற்றும் விஜயகாந்த்?

Report Print Arbin Arbin in இந்தியா
ராசியில்லையே.... தேமுதிக தலைமை அலுவலகத்தை இடம் மாற்றும் விஜயகாந்த்?

சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலத்தின் ஒரு பகுதி மேம்பால பணிக்காக முன்னர் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு காரணமே திமுகதான் என இன்னமும் குற்றம்சாட்டுகிறது விஜயகாந்த் குடும்பம்.

இத்தனைக்கும் நிலம் எடுக்கப்பட்டதற்கு பெருந்தொகையை இழப்பீடாக விஜயகாந்த் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டுவிட்டனர். ஆனாலும் தங்களது கட்டிடத்தை இடித்தது திமுகதான் என தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்தது. அத்துடன் தேமுதிக கட்சியும் கலகலத்துப் போன நிலையில், நிர்வாகிகளின் நிர்பந்தங்களை சமாளிக்க முடியாமல் கட்சியையே கலைத்திடுவேன் என்றெல்லாம் நிர்வாகிகளை மிரட்டி வருகிறார் விஜயகாந்த்.

இதனிடையே ஜோசியத்தில் அதீத நம்பிக்கைக் கொண்ட அவர், தலைமை அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்ற ஜோதிடர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டுவிட்டாராம்.

இதனால் கோயம்பேட்டில் இருந்து தேமுதிக தலைமை அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என அந்த கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

தற்போதைய தேமுதிக தலைமை அலுவலகம் இருக்கும் இடத்தில் மெகா மால் ஒன்றை கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்காக ஆந்திரா நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, விஜயகாந்த் தேமுதிகவை பாஜகவுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியில் இருந்து விலகி தற்போது திமுகவில் இணைந்துள்ள சந்திரகுமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments