தேமுதிகவை பாஜகவுடன் இணைக்க திட்டம்: பரபரப்பு தகவல்

Report Print Basu in இந்தியா
தேமுதிகவை பாஜகவுடன்  இணைக்க திட்டம்: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலுக்குப்பின், தேமுதிகவை பாஜகவுடன் இணைக்க அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டிருப்பதாக மக்கள் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி இடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாட்டை எதிர்த்த சில தேமுதிக நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி மக்கள் தேமுதிக என்ற கட்சியை நிறுவினர்கள் என்பது நினைவுக்கூரதக்கது.

இந்நிலையில், சேலத்தில் மக்கள் தேமுதிக ஆலேசானைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சந்திரகுமார், பார்த்தீபன் உட்பட கட்சியின முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து மக்கள் தேமுதிக நிர்வாகிகள் சந்திரகுமார், பார்த்தீபன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய பார்த்தீபன், தேமுதிகவை வழி நடத்தும் ஆற்றலும் திறமையும் விஜயகாந்த்திடம் இல்லை என்றார். இதனால், உள்ளாட்சித் தேர்தலுக்குப்பின், தேமுதிகவை பாஜகவுடன் இணைக்க விஜயகாந்த் திட்டமிட்டிருக்கும் தகவல் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments