யாருடனும் முகம் கொடுத்து கூட பேசமாட்டான்: ராம்குமார் குறித்து பக்கத்து வீட்டார் பேட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா
யாருடனும் முகம் கொடுத்து கூட பேசமாட்டான்: ராம்குமார் குறித்து பக்கத்து வீட்டார் பேட்டி

சுவாதி கொலையாளி ராம்குமார் மிகவும் ஒழுக்கமானவன் என அவனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதயத்துல்லா என்ற நபர் கூறியதாவது, பொறியியல் படித்துள்ள அவனுக்கு சில பாடங்களில் அரியர் உள்ளதால், சென்னையில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தான்.

இதுவரை எந்த பிரச்சனையிலும் அவன் ஈடுபட்டதில்லை என கூறியுள்ளார்.

மற்றொரு நபரான கருத்தபாண்டி கூறுகையில், யாருடனும் முகம்பார்த்து கூட பேசமாட்டான், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்தால் ஆடு மேய்க்கும் வேலையை செய்வான்,

இவ்வாறு ஒழுக்கமாக இருந்த ராம்குமார், ஒரு கொலையை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments