ராம்குமாரின் உடல் நிலை எவ்வாறு உள்ளது? டீன் விளக்கம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
ராம்குமாரின் உடல் நிலை எவ்வாறு உள்ளது? டீன் விளக்கம்

சென்னை சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் உடல் நிலை குறித்து மருத்துவமனை டீன் விளக்கமளித்துள்ளார்.

கொலையாளி ராம்குமார் நேற்று இரவு அவரது சொந்த ஊரான செங்கோட்டையில் பொலிசாரல் கைது செய்யப்பட்டார்.

பொலிசார் தன்னை கைது செய்ய நெருங்கி விட்டனர் என்பதை அறிந்த கொலையாளி, பிளேடால் தன்னை கழுத்து மற்றும் மற்ற இடங்களில் தாக்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதை அறிந்த பொலிசார் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராம்குமார் உடல்நிலை குறித்து டீன் சித்தி அத்திய முனிவார கூறியதாவது, ராம்குமார் கழுத்துப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன.

அவர் சுய நினைவுடன் இருக்கிறார், ஆனால் தற்போது அவரால் பேச இயலாது, குரல் வளையத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அது இன்னும் இரண்டு நாட்களில் சரியாகி விடும் ,அதன் பின்னர் அவரால் சகஜமாக பேசமுடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments