குடிபோதையில் நபரை கொன்ற பெண்கள்! சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் பயங்கரம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை தரமணி அருகே இன்று அதிகாலை 4.40 மணி அளவில் குடிபோதையில் ஆடி காரை ஒட்டி வந்த மூன்று பெண்கள் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மீது பயங்கரமாக மோதினர்.

இந்த சம்பவத்தில் முனுசாமி (48) என்ற நபர் 15 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் மற்றொரு வாகனத்தில் விரட்டிச் சென்று ஆடி காரை மடக்கிப் பிடித்தனர்.

அதில் இருந்து இறங்கிய மூன்று பெண்கள் குடி போதையில் தள்ளாடியபடி நின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அந்த மூன்று பெண்களையும் உடனடியாக மீட்டுச் சென்றதாகவும், இறந்தவரின் உடல் சுமார் ஒரு மணி நேரம் அளவில் அதே இடத்தில் இருந்ததாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

முனுசாமியின் உடல் தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆடி காரை இயக்கி வந்த பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா என்றும் அவர் தொழில் அதிபரின் மகள் என்றும் கூறப்படுகிறது.

அந்த வாகனம் தற்போது அடையாறில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்த மூன்று பெண்களையும் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கிண்டி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments