சுவாதி கொலை: தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
சுவாதி கொலை: தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

சுவாதி குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், சுவாதி கொலை மிகவும் கண்டிக்கதக்கது.

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும். ஓசூரில் கொலை செய்யப்பட்ட காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கியதை போல், சுவாதி, விஷ்ணு ப்ரியா,வினு ப்ரியாவின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தற்போது இருக்கும் காவல்துறை பொதுமக்கள் நலன் கருதி விரைந்து செயல்படவேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது பரப்பப்படும் அவதூறான விடயங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments