சுவாதியை கொன்றது ஏன்? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா
சுவாதியை கொன்றது ஏன்? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

சுவாதியை வெட்டி கொன்றது ஏன் என ராம்குமார் தனிப்படை பொலிசாரிடம் பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

அதில், நெல்லை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தேன். படிப்பை முழுமையாக முடிக்கவில்லை.

சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அப்போதுதான் சுவாதியின் அறிமுகம் கிடைத்தது.

நான் என்ஜினியரிங் பட்டதாரி என என்னை அறிமுகம் செய்து கொண்டேன், கடந்த 4 மாதங்களாக அவருடன் பழகி வந்தேன். நாளடைவில் அவரை காதலிக்க தொடங்கினேன்.

இந்நிலையில் நான் என்ஜினீயரிங் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்பதும், ஜவுளிக்கடையில் வேலை செய்வதும் சுவாதிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார்.

இதனால் அவரிடம் சென்று எனது காதலை சொன்னேன். ஆனால் அவர் என்னை உதாசீனமாக பேசினார். தொடர்ந்து என்னை சந்திப்பதை தவிர்த்தார்.

நாளடைவில் அவரது தந்தையை அழைத்து வந்தார், இதனால் அவரை வழியில் சந்திக்க முடியவில்லை, எனவே இருமுறை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் சென்று சந்தித்து பேசினேன், எனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சினேன்.

ஆனால் என்னை உதாசீனப்படுத்தினார், இதனால் எனக்கு கோபம் ஏற்பட்டது.

எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டு, அரிவாளை எனது பேக்கில் வைத்துக் கொண்டு சுவாதியை பின்தொடர்ந்தேன்.

கடந்த 24-ந் திகதி காலை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி ரெயிலுக்கு காத்திருந்தபோது அவரிடம் சென்று மீண்டும் எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினேன்.

அப்போதும் அவர் மறுத்துவிடவே, ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்து தப்பி விட்டேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments