சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தங்கியிருந்த (சூளைமேடு) விடுதியில் பொலிசார் தீவிர விசாரனை நடத்திவருகின்றனர்.
404 எண் கொண்ட அறையில் தங்கியிருந்த ராம்குமாரின் நண்பர்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் சென்னையில் உள்ள அவரது பிற நண்பர்களிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துணை கமிஷனர் மனோகரன் தலைமையில் பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து சிறப்பு படை பொலிசார் நெல்லைக்கு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொலையாளியை சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படவுள்ளது.