சுவாதி கொலைக் குற்றவாளி ராம்குமார் குறித்து தந்தை பரபரப்பு தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா
சுவாதி கொலைக் குற்றவாளி ராம்குமார் குறித்து தந்தை பரபரப்பு தகவல்

சுவாதியை கொலை செய்து விட்டு ஊர் திரும்பிய ராம்குமார் ஒருவாரமாக வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததாக அவரது தந்தை பொலிசில் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கொலையாளி யார் என பொலிசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.

இவர் சூளைமேட்டில் தங்கியிருந்து வேலை தேடி வந்துள்ளார் என்றும், சுவாதியை ஒருதலையாக காதலித்து வந்தார் எனவும் தெரியவந்துள்ளது.

இவரது புகைப்படத்தை வைத்துக் கொண்டு வீடு வீடாக விசாரணை நடத்தியதில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனின் காவலாளி அளித்த தகவலின் பேரில் இவரை கைது செய்துள்ளனர்.

பொலிசார் தன்னை நெருங்கி கொண்டிருக்கின்றனர் என தெரிந்ததும், கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், கடந்த ஒருவாரத்திற்கு முன்னரே தன் மகன் வீடு திரும்பியதாகவும், வந்ததில் இருந்து வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடந்ததாகவும் ராம்குமாரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த கொலையில் ராம்குமாரின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த பொலிசார் அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments