69 ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்திற்கு விடிவு காலம் பிறந்தது!

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியா சுதந்திரம் அடைந்த 69 ஆண்டுகளுக்கு பிறகு கிராமம் ஒன்றுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி என்ற மாவட்டத்தை சேர்ந்த கிராமம் சில்பட்டா.

மலைப்பாங்கான இந்த கிராமத்திற்கு பஸ் வசதிகள் ஏதும் இல்லாததால், மக்கள் நடந்து செல்ல வேண்டிய அவலநிலையே இருந்தது.

எனவே சாலை வசதி செய்து தரக்கோரி மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லாமல் போனது.

இந்நிலையில் பிரதமரின் கிராம சாலைகள் இணைக்கும் திட்டத்தின் கீழ் 21 கிலோ மீற்றர் தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டு நேற்று போக்குவரத்து தொடங்கியது.

69 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் பெண்கள் பாரம்பரிய நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தங்கள் பகுதிக்கு சாலை வசதி கிடைக்க உறுதுணையாக இருந்த கரன்பிரயாக் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அனுசுயா பிரசாத் மைகுரிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments