பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் 4 பிணங்கள்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Jubilee Jubilee in இந்தியா
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் 4 பிணங்கள்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
453Shares

சென்னை ராயப்பேட்டையில் பூட்டிய வீடு ஒன்றில் இருந்து 4 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சின்னராசு. இவர் சென்னை ராயப்பேட்டையில் மனைவி சந்தன மீனா மற்றும் மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா ஆகிய 4 பேருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது வீடு கடந்த 3 நாட்களாகவே பூட்டப்பட்ட நிலையிலே இருந்தது. இதனால் அவரது வீட்டின் உரிமையாளர் காரணம் கேட்ட போது சின்னராசு பதற்றத்தில் முன்னுக்கு முரணாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

மேலும், பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றமும் வந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் ராயப்பேட்டை பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த பொலிசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது சின்னராசின் மனைவி சந்தனமீனா மற்றும் மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா ஆகிய 4 பேரும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதனையடுத்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தலைமறைவான சந்தன மீனாவின் கணவர் சின்னராசை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments