பிறந்த கன்று பால் தரும் அதிசயம்

Report Print Fathima Fathima in இந்தியா
1179Shares

தமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

சேலத்தின் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியை அடுத்த கே .மோரூர் பகுதியை சேர்ந்த விவசாயி வேலு (வயது 39).

இவர் மூன்று பசுமாடுகளை வளர்த்து வருகிறார், சமீபத்தில் கருத்தரித்த மாடு ஒன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றது.

பசு மாட்டிற்கு இருப்பதை போலவே கன்றுக்கும் மடி இருந்துள்ளது. ஆரம்பத்தில் இதை அவர் கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை.

ஒருநாள் பால் கறப்பதற்காக பசு மாட்டின் அருகில் சென்ற போது, கன்றின் மடியில் இருந்து பால் சொட்டு சொட்டாக கொட்டியுள்ளது.

இதை பார்த்து அதிசயித்த அவர் கன்று குட்டியின் மடியில் பாலை கறந்து உள்ளார், அப்போது அந்த கன்றுக்குட்டி அரைலிட்டர் பால் கறந்தது.

இதை கேள்விப்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து கன்றுகுட்டி பால் கறப்பதை அதிசயமாக பார்த்து சென்றனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறுகையில், ஹார்மோன் பிரச்னையால் இதுபோன்று லட்சத்தில் ஒன்று நடக்கும், நாளடைவில் சராசரி கன்றுகுட்டியாக மாறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments