இளைஞனின் வயிற்றில் கர்ப்பப்பை! - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

Report Print Akshi in இந்தியா
1273Shares

இந்தியாவில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்த கர்ப்பப்பையை மருத்துவர்கள் நேற்று (23) அகற்றியுள்ளனர்.

ஓசூரை சேர்ந்த 20 வயதுடைய அமரேஷ் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் அமரேஷ்க்கு வயிற்று வலி அதிகமானது. இதைத் தொடர்ந்து அமரேஷை ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவரின் வயிற்றில் கர்ப்பப்பை இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக அமரேஷ்க்கு நேற்று அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர்.

இதுபோல் ஆண்களுக்கு கர்ப்பப்பை இருப்பது மிகவும் அரிதானது. இப்போது அறுவை சிகிச்சைக்கு பின் அமரேஷ் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments