பட்டப்பகலில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் குத்திக்கொலை

Report Print Basu in இந்தியா
பட்டப்பகலில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் குத்திக்கொலை
582Shares

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் மிருகதனமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டபெண் சூளைமேடு பகுதியை சேர்ந்த சுவாதி(25-வயது)எனவும், அவர் செங்கல்பட்டில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது செங்கல்பட்டு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி காத்திருந்த போது,கருப்பு உடை அணிந்து வந்த ஒரு இளைஞன், சுவாதியை மிருகதனமாக தாக்கி கத்தியால் குத்திக்கொன்று விட்ட தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பெண்ணின் உடலை கைப்பறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இச்சம்பவம் நுங்கம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொலிசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments