2021ல் சின்ன அம்மா சசிகலாவை முதல் அமைச்சராக்குவோம்! பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

Report Print Basu in இந்தியா
2021ல் சின்ன அம்மா சசிகலாவை முதல் அமைச்சராக்குவோம்!  பரபரப்பை கிளப்பிய போஸ்டர்
324Shares

எதிர்வரும் 2021ல் சின்ன அம்மா சசிகலாவை தமிழக முதல் அமைச்சராக்குவோம் என சின்ன அம்மா பேரவை நிறுவனர் ஏ.எல்.சின்னதம்பி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம்,தமறாக்கியைச் சேர்ந்தவர் ஏ.எல். சின்னதம்பி. இவர் சிங்கங்கை, காந்திவீதியில் சின்னஅம்மா பேரவை என சசிகலா பெயரில் பேரவை தொடங்கி அலுவலகத்தையும் திறந்துள்ளார்.

மேலும், சசிகலா படத்துடன்டி.டி.வி.தினகரன், திவாகரன் ஆகியோர் படத்தையும் போட்டு ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனியார் இதழ் ஒன்று அவரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது,

ஸ்ரீதர்வாண்டையாரின் முவேந்தர் முன்னேற்ற கழகத்தில் 15 வருடமாக இருந்தேன். அது ஒரு சாதி கட்சியாக இருந்தது.அது எனக்கு பிடிக்கவில்லை.

ஆகையால் அதிலிருந்து வெளியேறினேன். நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. நான் வருடம் தோறும் ரூபாய் 20 ஆயிரத்திற்கு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு,புத்தகம் வாங்கிக் கொடுக்கிறேன். இனி சின்ன அம்மா பேரவை மூலம் இந்த சேவையை செய்ய இருக்கிறேன்.

அம்மாவுக்கு(ஜெயலலிதா) பின்னால் சின்ன அம்மா தான் முதல் அமைச்சராக வரவேண்டும். 40 ஆண்டுகளாக ஜெயலலிதாவோடு, இருப்பதால் விட்டுக் கொடுக்கலாம்.

அப்படி விட்டுக்கொடுக்காவிட்டாலும் 2021ல் நாங்கள் சின்ன அம்மாவை முதல் அமைச்சராக்குவோம். நான் அதிமுக பிரமுகர்கிடையாது. ஆகையால் எப்படி இந்த பேரவை வைக்கலாம் என்று என்னை அதிமுகவினர் கேட்க முடியாது. சின்ன அம்மாவின் பெயரையும்,புகழையும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லவதே எங்களின் நோக்கம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments