தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடு விழா!

Report Print Arbin Arbin in இந்தியா
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடு விழா!
622Shares

தமிழகத்தில் மூடப்படும் 500 கடைகளின் பட்டியல் தயாராகியுள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்து 826 கடைகளில், எந்த 500 கடைகளை முதலில் மூடுவது என்பது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, தற்போது மூடப்படும் 500 கடைகள் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர்.

அதன்படி, சென்னை மண்டலத்தில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்) 84 கடைகளும், திருச்சி மண்டலத்தில்(விழுப்புரம், திருவாரூர், கடலூர், கரூர், புதுக்கோட்டை, கும்பகோணம், பெரம்பலூர், தஞ்சாவூர் ) 72 கடைகளும்,

சேலம் மண்டலத்தில்(திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி) 98 கடைகளும், கோவை(ஈரோடு, ஊட்டி, கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, காங்கேயம்),

மதுரை(நெல்லை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நாகர்கோவில், திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி) மண்டலத்தில் மீதமுள்ள 246 கடைகளும் என 500 கடைகள் வெகுவிரைவில் மூடப்பட உள்ளன.

மேலும், தேவலாயங்கள், மசூதிகள், கோவில்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள், மகளிர் தங்கும் விடுதிகள், பஸ்-ரெயில் நிலையங்கள் ஆகியவற்றின் அருகில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கும்,

பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள மனுக்களில் கூறப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் திகதி குறித்த அறிவிப்பு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments