இந்தியாவில் உறவுக்கு மறுத்த கணவனை அவரது மனைவி அடித்து கொலை செய்த குற்றத்திற்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் நகரில் விமலா வகீலா என்ற 54 வயதான பெண் அவருடைய கணவரான நர்சிங் என்பவருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு நாள் இல்லற உறவில் ஈடுப்பட மனைவி விரும்பியுள்ளார். ஆனால், விருப்பம் இல்லாமல் கணவன் படுக்கையை விட்டு எழுந்து சென்றுள்ளார்.
அப்போது, ‘உங்களுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. அதனால் தான் என்னுடன் உறவில் ஈடுப்பட மறுக்கிறீர்கள்’ என குற்றம் சாட்டியுள்ளார்.
மனைவியின் குற்றச்சாட்டுக்கு கணவன் எந்த பதிலும் தெரிவிக்காததால், ஆத்திரத்தில் பொங்கிய மனைவி அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து கணவனின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கணவன் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். கணவனின் மரணத்தை உறுதி செய்த மனைவி உடனடியாக வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
‘கணவன் என்னை கொலை செய்ய முயன்றதால், தன்னை காப்பாற்றிக்கொள்ள அவரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டதாக’ வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், பொலிசார் நடத்திய விசாரணையில் கணவனை மனைவி அடித்துக்கொலை செய்தது நிரூபணம் ஆனது.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பான இறுதி விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, கணவனை மனைவி கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், குற்றவாளிக்கு 2,000 ரூபாய் அபாரதம் விதிப்பதாகவும், அதனை செலுத்த தவறினால் 6 மாதங்கள் கூடுதலாக சிறையில் கழிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.