கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்டு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா வழக்கு குறித்த பல கட்டுக் கதைகள் வெளியாகியுள்ளன.
கேரளாவின் பெரும்பாவூரில் வீட்டில் தனியாக இருந்த சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா(29) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில் இவரது மரணம் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் வெளியாகியுள்ளது.
ஜிஷா குடிப்பழக்கம் உள்ளவர், அவர் போதையில் இருக்கும்போது தான் கொலை நடந்தது என்று கூறப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் மது இல்லாதது தெரியவந்தது.
இதற்கிடையே அரசியல் தலைவர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும், சொத்துக்காக அவரை ஆள்வைத்து கொலை செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் பல்வேறு கட்டுக்கதைகள் உலா வரும் நிலையில், அஸ்ஸாமை சேர்ந்த நபரை பிடித்து வைத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.