ஏடிஎம் காவலாளி கொடூரமாக அடித்துக் கொலை: பதற வைக்கும் வீடியோ

Report Print Basu in இந்தியா
1809Shares

ராஜஸ்தானில் ஏடிஎம் நிலையத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி ஒருவர் மிருகத்தனமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஏடிஎம் நிலையத்திலிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jhunjhunu-வில் உள்ள ஒரு ஏடிஎம் நியைலத்தில் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரவு நேரத்தில் காவலாளி ஏடிஎம் உள்ளே தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது முகத்திரையிடன் நுழைந்த ஒரு மர்ம நபர், தான் வைத்திருந்த உருட்டு கட்டையால், காவலாளியை மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காவலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இனியும் இது போன்ற ஏழை பணியாளர்கள் கொல்லப்படுவதை தடுக்க, இ்வ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, நிபந்தனையின்றி ஒரு கடுமையான தண்டனை வழங்கிட இந்தியா அரசாங்கம் ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments