கோவையில் ஸ்கேன் எடுக்க வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் தயானந்தர். இவர் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் ஸ்கேன் மையம் நடத்தி வருகிறார்.
இவரது ஸ்கேன் மையத்துக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் குழந்தையின் வளர்ச்சி குறித்து தெரிந்துகொள்ள சிறுமுகையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சென்றுள்ளார்.
அப்பெண்ணுக்கு ஸ்கேன் எடுக்கும் போது, மருத்துவர் தயானந்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் பொலிசார், தயானந்தரை கைது செய்துள்ளனர்.