யார் போனாலும் சரி நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன்: சீமான்

Report Print Basu in இந்தியா
யார் போனாலும் சரி நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன்: சீமான்
1515Shares

அனைவரும் என் பின்னால் வருவார்கள் தேர்தலில் நிற்பார்கள் என்று நினைத்து இந்த பணியை நான் செய்யவில்லை, நீங்கள் எல்லோரும் என்னை விட்டு போய்விட்டால் கூட நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன் என சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பல பேர் தங்களின் வேலையை விட்டு விட்டு போட்டியிட்டனர்.

இதை நீங்கள் ஒரு தோல்வியாக கருத கூடாது, சிறந்த தொடக்கமாக எடுத்துக் கொண்டு நாம் மறுபடியும் அயராது களத்தில் நிற்க வேண்டும்.

நாம் எப்படிபட்ட தலைவனின் பிள்ளைகள், அவர் நோக்கமும், நாம் நோக்கமும் ஒன்று தான் அடிமை தேசிய இனத்தின் விடுதலை.

ஒரு வித்தியாசம் அவருடையது ஆயுதம் ஏந்திய புரட்சி, நம்முடையது அறிவு ஆயுதம் ஏந்திய அரசியல் புரட்சி, ஆனால் நோக்கம் ஒன்று தான் இலக்கு ஒன்று தான் அதை நாம் அடைய வேண்டும்.

அனைவரும் என் பின்னால் வருவார்கள் தேர்தல் நிற்பார்கள் என்று நினைத்து இந்த பணியை நான் செய்யவில்லை, நீங்கள் எல்லாரும் போய்விட்டால் கூட நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன் என சீமான் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments