விஜய் மல்லையா ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி

Report Print Basu in இந்தியா
விஜய் மல்லையா ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி

நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அமலாக்கத்துறை தரப்பில் மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், விஜய் மல்லையா வேண்டுமென்றே கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, இந்தியாவுக்கு வராமல் லண்டனிலேயே தலைமறைவாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அவர், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்ற நிலையில், அவரை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கத்துறை மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையேற்று விஜய் மல்லையா என்பவர் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளியே என வலியுறுத்தி, மும்பை நீதிமன்றம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அவரை மீண்டும் நாடு கொண்டுவர நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில், விஜய் மல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்புவது பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள், இண்டர்போல் உடன் பேச்சுவார்த்தை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments