மது போதையில் பாதசாரிகள் மீது கார் ஏற்றி கொன்ற கல்லூரி மாணவன்: அதிர்ச்சியளிக்கும் வீடியோ

Report Print Basu in இந்தியா

டெல்லியில் ஜனக்புரி பகுதியில், பயங்கர வேகத்தில் வரும் கார் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வீடியோ காட்சியை டெல்லி பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ரிஷாபத்(வயது-21),இன்று காலை 6.30 மணிக்கு ஜனக்புரி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மூன்று பேர் மீது காரால் மோதி விபத்து எற்படுத்தியுள்ளார்.

விபத்தில் காமேஷ்வர் பிரசாத்(வயது-40) மற்றும் அஸ்வினி ஆனந்த(67) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த சந்தோஷ்(40) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிஸ் கூறுகையில்: ரிஷாபத், கல்லூரில் இளநிலை பட்டம் படித்து வரும் மாணவர், இன்று காலை மதுபோதையில் ஹோண்டா சிட்டி கார் ஓட்டி குறித்த விபத்துகளை எற்படுத்தியுள்ளார்.

எனினும், சம்பவத்தை தொடர்ந்து ரிஷபாத்தை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments