பிரபல பாடகர் எம்.எஸ் சுப்புலட்சுமி சிகரெட் பிடித்தாரா? சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

Report Print Peterson Peterson in இந்தியா
பிரபல பாடகர் எம்.எஸ் சுப்புலட்சுமி சிகரெட் பிடித்தாரா? சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

இசை உலகில் புகழ்பெற்ற பாடகர் எம்.எஸ் சுப்புலட்சுமி மற்றும் நடன கலைஞர் பாலசரஸ்வதி ஆகிய இருவரும் சிகரெட் வைத்திருப்பது போல் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சென்னையின் புராதான வரலாறுகளை Madras Local History group என்ற பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த பேஸ்புக் பக்கத்தில் தான் சர்ச்சைக்குரிய இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில், பிரபல கர்நாடக பாடகர் எம்.எஸ் சுப்புலட்சுமி வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு இருப்பது போலவும், அருகில் பிரபல நடன கலைஞரான பாலசரஸ்வதி கையில் சிகரெட் வைத்துக்கொண்டு இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.

இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் உண்மையானது என்றும் போலியானது என்றும் பலரால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த புகைப்படம் உண்மையானது என்றும் Douglas M Knight என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட Balasaraswati: Her Art and Life என்ற புத்தகத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த புத்தகத்தில் ‘1937ம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் உள்ள எம்.எஸ் சுப்புலட்சுமியும் பாலசரஸ்வதியும் நெருங்கிய தோழிகள்.

கட்டுப்பாடுமிக்க குடும்பத்தில் இருந்து இருவரும் வந்திருந்தாலும், மேற்கத்திய நாகரீகமான வாழ்க்கையை வாழ இவர்கள் இருவரும் விரும்பியுள்ளனர்.

இதன் வெளிப்பாடாகவே, இருவரும் இரவில் அணியக்கூடிய பைஜாமா உடுப்புகளை அணிந்துக்கொண்டு, போலியாக சிகரெட் பிடிப்பது போல் இந்த புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுத்ததாக எழுத்தாளர் Douglas M Knight இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments