மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறிய குஷ்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா
மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறிய குஷ்பு

சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் குஷ்பு வெளியேறியுள்ளார்.

நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய ஜான்சிராணி, ராகுல் காந்தி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் மகளிர் காங்கிரசாருக்கு உரிய பிரதிநிதித்துவம் பெறப்படும்.

அதற்கு முன்னர் செயல்படாமல் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் களையெடுக்கப்படுவர் என கூறியுள்ளார்.

இந்த கூட்டம் சத்தியமூர்த்தி பவனின் இரண்டாவது மாடியில் நடந்தபோது, குஷ்பு கீழ் தளத்தில் இருந்துள்ளார், இந்த தகவல் ஜான்சிராணிக்கு தெரிவிக்கப்பட்டது, ஆனால், அவர் கண்டுகொள்ளாமல் குஷ்புவை அழைக்காத காரணத்தால் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அதுபோன்று இந்த கூட்டத்திற்கு, சட்டசபை காங்கிரஸ் கொறடா விஜயதாரணி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் நக்மா, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலர் ஹசீனா சையது ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்பதால் இவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments