டெல்லியில் இன்று பிரதமரை சந்திக்கிறார் ஜெயலலிதா

Report Print Arbin Arbin in இந்தியா
டெல்லியில் இன்று பிரதமரை சந்திக்கிறார் ஜெயலலிதா

ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முதலாக இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் 2 மணிக்கு டெல்லி சென்றடையும் ஜெயலலிதா அங்குள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார்.

அங்கு ஓய்வு எடுத்துக்கொள்ளும் ஜெயலலிதா, மாலை 4.40 மணிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் வரை நீடிக்கும் என தெரிகிறது.

இந்த சந்திப்பின்போது, மீனவர் பிரச்னை, முல்லைப்பெரியாறு அணை விவகாரம், தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 32 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றையும் அளிக்க இருக்கிறார்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு டெல்லி விமான நிலையம் செல்லும் ஜெயலலிதா, தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இரவு 9.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு காரில் திரும்புகிறார்.

ஜெயலலிதாவுடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், முதல்வரின் செயலாளர்கள் வெங்கட் ரமணன், சிவ்தாஸ் மீனா, விஜயகுமார், ராமலிங்கம், கூடுதல் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லி செல்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments