டெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு

Report Print in இந்தியா
டெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு

டெல்லியில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த ஜனவரி 1ம் திகதி முதல் 15ம் திகதி வரை அங்கு வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.

இதன்படி, ஒற்றைப்பட்டை கொண்ட தேதிகளில் ஒன்றை இலக்க எண்கள் கொண்ட வாகனங்களும், இரட்டைப்படை திகதிகளில் இரட்டை இலக்க எண்களை உடைய வாகனங்களும் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டன.

இதனால் போக்குவரத்து ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து இத்திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்த பல தரப்பினரும் ஆதரவளித்துள்ளனர்.

இந்நிலையில் ஏப்ரல் 15 முதல் 30ம் திகதி வரை மீண்டும் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.

இது குறித்து முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, இந்தமுறை கிடைக்கும் பலனை பொறுத்து டெல்லியில் ஒவ்வொரு மாதமும் 15 தினங்களுக்கு வாகனக் கட்டுப்பாடு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

கடந்த முறை சோதனை முறையினால் டீசல் விற்பனை 40 சதவிகிதம் குறைந்துள்ளது. இதில் வரும் சிரமங்களை தவிர்க்க தம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வாகனங்களை இருவரும் மாறி, மாறி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.

காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் அமலில் இருக்கும் வாகனக் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இவர்களை கண்காணிக்கும் பொருட்டு முன்னாள் ராணுவத்தினர் சுமார் 400 பேர் பணியில் ஈடுபடுத்தப்படவும் உள்ளனர். இவர்களுடன் இணைந்து டெல்லியின் போக்குவரத்து கட்டுப்பாடுத்துறையின் 120 குழுக்கள் டெல்லி சாலைகளில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments