இந்தியாவுடன் கைகோர்க்க சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு: மோடி பேச்சு

Report Print Aathi Aathi in இந்தியா
இந்தியாவுடன் கைகோர்க்க சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு: மோடி பேச்சு

இந்திய கடல்சார் மாநாடு மும்பை புறநகர் கோரேகாவ் என்.எஸ்.இ. மைதானத்தில் தொடங்கியுள்ளது.

பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியுள்ளார்.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மஹாராஸ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுடன் கோவா, குஜராத் மாநில முதலமைச்சருகளும் கலந்துக் கொண்டுள்ளனர்.

41 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, துறைமுக தலைமையிலான மேம்பாட்டுக்கு இந்தியாவுடன் கைகோர்க்க சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன், அது வளர்ச்சிக்கான இயந்திரமாக இருக்கும் என்று கூறிஉள்ளார்.

பூமியில் 70 சதவிதம் கடல்பரப்பு உள்ளது, இதுவே கடல்வழி வர்த்தகம் முக்கியத்துவத்திற்கு காரணம். இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக உள்ளது.

இந்தியாவை உற்பத்தி மையமாக்க நாங்கள் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்.’மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் இந்தியாவின் முன்முயற்சியை மூடிஸ் நிறுவனம் பாராட்டியுள்ளது.

கடல்வழியாக சரக்குகள் கையாளப்படுவது இந்திய பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியம். கடந்த 2016-ம் ஆண்டு அதிகளவில் இந்தியாவில் அன்னிய முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலத்துடன், துறைமுகங்களும் ஒன்றிணைக்கப்படும். நமது வாழ்க்கை முறை கடல் வளத்தை பாதிக்கக்கூடாது. துறைமுகங்களை நவீனப்படுத்த அரசு விரும்புகிறது என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments