தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள “புத்தாண்டு ராசி பலன்”

Report Print Aathi Aathi in இந்தியா
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள “புத்தாண்டு ராசி பலன்”

தமிழக சட்டபேரவை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “புத்தாண்டு ராசி பலன்” வெளியிட்டுள்ளது.

சட்டபேரவை தேர்தல் மே 16ம் திகதி நடக்கவுள்ளது. இந்நிலையில் தொடக்கம் முதலே தேர்தல் ஆணையம் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று ஏப்ரல் 14ம் திகதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு “புத்தாண்டு ராசி பலன்” வெளியிட்டு அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

அதில் “ராசிக்காரர்களே இந்த வருடம் உங்களுக்கு நல்ல வருடமாக அமையும். அடுத்த 5 வருடமும் நல்ல வருடமாக அமைய மே 16 அன்று தவறாமல் வாக்களிக்கவும்” என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments